ETV Bharat / state

மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நிறைவடையும் - மேயர் பிரியா

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நிறைவடையும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெருவித்துள்ளார்.

மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நிறைவடையும் - மேயர் பிரியா

author img

By

Published : Jun 12, 2022, 8:32 AM IST

சென்னை: மெரினா கடற்கரையில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” என்ற தலைப்பில் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு கலந்துகொண்டார். இந்நிகழ்வில் தூய்மைப் பணிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி ஊழியர்கள் பதாகைகளை ஏந்தியபடி கடற்கரை சாலையில் பேரணியாக சென்றனர். மேலும் மக்களுக்கு சுற்றுசூழல் தூய்மைக்கான துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா "இந்த தீவிர தூய்மை பணியானது மாதங்களில் இருமுறை இரண்டாவது சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமைகளில் நடைபெற உள்ளது”. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களில் முக்கியத்துவம் அளித்து தூய்மைப் பணி நடைபெறும்." என தெரிவித்தார்.

மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நிறைவடையும் - மேயர் பிரியா
மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நிறைவடையும் - மேயர் பிரியா

மழைநீர் வடிகால் பணிகள் தேக்கம் அடைந்து உள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு மழைநீர் வடிகால் பாதை அமைக்கும் பணியானது வருகின்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். மேலும் மெரினா கடற்கரையில் செயல்பட்டு வந்த முதலுதவி சிகிச்சை மையங்கள் மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: Watch Video: சூட்டிங் இடைவேளையிலும் கடும் உடற்பயிற்சியில் சூரி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.