ETV Bharat / state

6 மாவட்டங்களுக்கு மழை அலெர்ட் - தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லேசான மழை
லேசான மழை
author img

By

Published : May 25, 2021, 4:34 PM IST

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக, கன்னியாகுமரி, மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கோவை, தேனி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று (மே.25) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

  • மே 26ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை கன்னியாகுமரி, மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
  • வட தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
  • சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)

தக்கலை (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம் ), நாகர்கோயில்(கன்னியாகுமரி) ஆகிய ஊர்களில் தானியங்கி மழைமானியில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

  • மே 25 முதல் மே 27ஆம் தேதி வரை: குமரிக்கடல் , மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
  • மே 25 முதல் மே 26ஆம் தேதி வரை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
  • வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 60-70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
  • மே 25ஆம் தேதி: மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு வங்கக் கடல், ஒடிஷா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
  • மே 26ஆம் தேதி: வட மேற்கு வங்கக் கடல், ஒடிஷா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 155 முதல் 165 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 185 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
  • மே 26ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை: தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தீவிரப் புயல் (யாஸ்) அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று அதிதீவிர புயலாக உருப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை (மே.25) பிற்பகல் பாரதீப்-சாகர் தீவுக்கு இடையே பாலசுருக்கு அருகே கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.