தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, தேனி, திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களிலும், திருத்தணியிலும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து அனல் காற்று வீசும் எனவும் விவசாயிகள், பொதுமக்கள் 11.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியாக இருக்கும்.
இதையும் படிங்க: இரு நாள்களாக உச்சபட்ச வெப்பநிலை கண்ட இந்தியா!