ETV Bharat / state

கனமழை எதிரொலி: நிரம்பும் மதுராந்தகம் ஏரி; பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - Agriculture Lands Affected ny Rain

சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், இரு ஆண்டுகளுக்கு பின் மதுராந்தகம் ஏரி நிரம்பவுள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளது

rainfall-impact-across-tamilnadu
rainfall-impact-across-tamilnadu
author img

By

Published : Dec 2, 2019, 8:58 AM IST

Updated : Dec 2, 2019, 10:42 AM IST

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரும் ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்போது 17 அடி வரை தண்ணீர் எட்டியுள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வருவதால், கடந்த இரு ஆண்டுகளாக நிறையாத மதுராந்தம் ஏரி நிரம்பவுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் - மணக்குடியை இணைக்கும் வகையில் கடந்த ஆண்டு பாலம் ஒன்று கட்டப்பட்டது. கனமழையின் காரணமாக தற்போது கரை பலவீனமாகியுள்ளது. இதனால் கரை வலுவிழந்த இடத்தில் தண்ணீர் விளைநிலங்களில் புகுந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி கரையைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கனமழையால் நிரம்பும் மதுராந்தகம் ஏரி

இதேபோல் வடகரை கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகள் சேக்தம்டைந்ததோடு, பாதிக்கப்பட்டவர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ள பாதிப்புகளை மயிலாடுதுறை தொகுதி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரசாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் நீரில் மூழ்கி உள்ள நெற்பயிர்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்யும் ராதாகிருஷ்ணன், அரசு அலுவலர்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் விவசாயப் பணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சரக்கு வாகனங்கள் என பல்வேறு தரப்பினரின் தொழில்களும் தேக்கமடைந்துள்ளது. பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு பெய்த கனமழையால் பாதிப்பு

இதையும் படிங்க: மழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து

Intro:மயிலாடுதுறை பகுதியில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. கரை உடையும் இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கியும், டிராக்டர் மூலம் மணலை கொட்டியும் கரையை பலப்படுத்தும் பணி தீவிரம். பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆய்வு:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல்-மணக்குடியை இணைக்கும் வகையில் கடந்த ஆண்டு புதிய பாலம் கட்டடப்பட்டது. கடந்த 3நாட்களாக பெய்துவரும் கனமழையால் காவிரி ஆற்றில் தற்போது வெள்ளம்பெறுக்கெடுத்து ஓடுவதால் பாலம்கட்டுமான பணியின் போது கரை வலுவிழந்த இடத்தில் தண்ணீர் விளைநிலங்களில் புகத்தொடங்கியது. அதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகள் அடுக்கியும், டிராக்டர் மூலம் மணலை கொண்டி கரையை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வரகடை கிராமத்தில் பழவாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீட்டின் சுவர்கள் இடிந்து சேதமடைந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்னர். இந்த மழை வெள்ள பாதிப்புகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரசாத் மற்றும் மயிலாடுதுறை எம்.எல்.ஏ.ராதாகிருஷ்ணன் மன்னம்பந்தல், வரகடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பழவாற்றில் வெள்ள நீர் உட்புகாதவாறு தடுப்பு சுவர் கட்டி தரப்படும் என்றும் நீரில் முழ்கி உள்ள நெற்பயிர்களை கணக்கீடு செய்யப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார்.Conclusion:
Last Updated : Dec 2, 2019, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.