ETV Bharat / state

'தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு மழை மட்டுமே காரணம் இல்லை' - rain water harvesting

சென்னை : தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்துக்கு மழைக்குறைவு  மட்டுமே காரணம் இல்லை; மழைநீர் சேமிப்பு முறை இல்லாததும் முக்கியக் காரணமாகும்.

தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு மழை மட்டுமே காரணம் இல்லை
author img

By

Published : Jun 19, 2019, 4:33 PM IST

தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒருபுறம் வெயில் வெளுத்துவாங்க மறுபுறம் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டுவருகின்றனர். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் மக்கள் தண்ணீரின்றி தவித்துவருகின்றனர்.

எங்கு பார்த்தாலும் மக்கள் வீதியில் காலிக்குடங்களுடன் தண்ணீர் லாரி வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் வீட்டில் அவதிப்படும் மக்கள் அலுவலகத்துக்கு சென்றாலும், உணவகங்களுக்கு சென்றாலும் அதே பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.

தண்ணீர் பிரச்சனையால் பல, ஐடி நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு மழை மட்டுமே காரணம் இல்லை

இந்த அளவு தண்ணீர் பிரச்னை வரக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், மழைப்பொழிவு சரியாக இல்லாதது மட்டுமே இதற்கு காரணம் என்று கூறிவிட்டு கடந்துவிட முடியாது. 2018இல் வடகிழக்கு பருவமழை வெறும் 50 விழுக்காடுதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது.

இந்தக் குறைவான மழைப் பதிவுதான் தற்போது நிலவிவரும் தண்ணீர் சிக்கலுக்கு காரணமா? என்றால் இல்லை என அடித்துச் சொல்கிறார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சேகர் ராகவன்.

இது குறித்து அவர் பேசுகையில், 'மழைப்பொழிவு குறைந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை, சென்னையில் 2015இல் வரலாறு காணாத மழை பொழிந்து உள்ளது. ஆனால் அந்த சமயத்தில் நாம் தண்ணீரை சேமிக்க தவறியுள்ளோம். மழைப்பொழிவு எங்கு உருவாக உள்ளதோ அங்கு சேமிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் சிறப்பான மழைநீர் சேமிப்புத் திட்டம் செயல்படுத்திய மாநிலம் ராஜஸ்தான், அதே போல் சென்னையில் ஒவ்வாரு மழைத் துளியையும் சேமிக்க வேண்டும் என்பது நமது கடமை. ஆனால் அதை நாம் செய்ய தவறிவிட்டோம். 18 வருடங்களாக மழை தாராளமாக பொழிந்தது.

சென்னையில் பல ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்பால் சரியாக தண்ணீர் சேமிக்க முடியாமல் போனது. அதன் விளைவே 2015 சென்னை வெள்ளம் வர காரணமாக இருந்தது. தண்ணீர் சிக்கலைத் தீர்க்க சிறந்த வழி சரியான முறையில் மழை நீரை சேமிப்பது மட்டுமே. 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மழை நீர் சேமிப்பு கட்டாயம் என கூறியது.

அதன்படி 40 முதல் 50 விழுக்காடு மக்கள் சரியாக மழைநீர் சேமிப்புத் திட்டத்தை அமல்படுத்தினர். அதன் பிறகு மழை நீர் சேமிப்பில் தொய்வு ஏற்பட்டது. இனிவரும் காலங்களில், புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டாயம் இருக்கும் வேண்டும்' என்றார்.

Intro:Body:மழை குறைவு இல்லை சேமிக்கும் முறை இல்லாததே தற்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னையால் வாடி வருகிறது. ஒரு புறம் வெயில் வெளுத்துவங்க மறு புறம் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை போன்ற நகரங்கள் பெரிதும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் காலை, மாலை என அனைத்து நேரங்களிலும் மக்கள் வீதியில் காலி குடங்களுடன் தண்ணீர் லாரி வருகைக்காக காத்துகொண்டு இருக்கின்றனர், தெரு முனையில் தண்ணீர் குழாய்கள் முன் நீண்ட வரிசையில் குடங்களை வைத்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பணம் இருந்தால் தண்ணீர் என்ற நிலையை சுக்குநூறு ஆக்கியுள்ளது இந்த வருடம் தண்ணீர் பிரச்சனை.

பல ஐடி நிறுவனகங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதி என அனைத்தும் தண்ணீர் பிரச்சனையால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல அடுக்குமாடி குடியிருப்போர்களும் தண்ணீர் லாரிக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல லாரி ஓட்டுனர்கள் தங்கள் தொலைபேசியை அணைத்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவு தண்ணீரின் அடிப்படை தேவைக்கு கூட இல்லாத நிலையில் சென்னை உள்ளது.

இந்த அளவு தண்ணீர் பிரச்சனை வர காரணம் என்ன என்று ஆராய்ந்தால் வருத்தம் அளிக்கும் விடையே நமக்கு கிடைக்கிறது. மழை பொலிவு சரியாக இல்லாதது மட்டும் தான் இதற்கு காரணமா என்றால் இல்லை. நமக்கு சில சமயத்தில் அளவுக்கு அதிகமா கிடைக்கும் மழை நீர் சரியாக சேமிக்க படுகிறதா என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். 2018 இல் வடகிழக்கு பருவ மழை வெறும் 50 % தான் தமிழகத்திற்கு கிடைத்தது.

குறிப்பாக 2018 இல் சென்னையில் மிகவும் குறைவான நாட்களே மழை பொலிவு இருந்தது. ஆனால் இந்த குறைவான மழை பதிவுதான் தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சனைக்கு காரணமா என்றால் நிச்சயமாக இல்லை என விளக்குகிறார் மழை இல்லம் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் சேகர் ராகவன். அவர் இதை பற்றி விளக்கியபோது, மழை பொழிவின் அளவு கம்மியாக இருக்கிறது என்ற வாதம் மிகவும் தவறான வாதம். ஏனென்றால் சராசரியாக சென்னைக்கு 1 .3 மீட்டர் தான் மழை பொழிவு. சென்னைக்கு 2015 , 2005 போன்ற வருடத்தில் வரலாறு காணாத மழை பொழிந்து உள்ளது. இந்த சமயத்தில் நாம் அந்த தண்ணீரை சேமிக்க தவிறியுள்ளோம். மேலும் மழை பொழிவு எங்கு குருவாக உள்ளதோ அங்கு சேமிப்பு அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ராஜஸ்தான் மாநிலம். இந்தியாவில் சிறப்பான மழை நீர் சேமிப்பி திட்டம் செயல்படுத்திய மாநிலம் என்று பாரதம் அது ராஜஸ்தான் என கூறலாம். அதுபோல் சென்னையில் ஒவ்வாரு மழை துளியையும் சேமிக்க வேண்டும் என்பது நமது கடமை. கடந்த 18 வருடங்களில் மழை தாராளமாக இருக்கிறது. ஆனால் அந்த மழை நீர் பூமிக்கு செல்ல முடியாமல் தேங்கி நிற்பது தான் நிலத்தடி நீர் குறைய காரணம். சென்னையில் பல ஏறி, குளம் ஆக்ரமிப்பால் சரியாக தண்ணீர் சேமிக்க முடியாமல் உள்ளது. அதன் விளைவே 2015 சென்னை வெள்ளம் என கூறினார். மேலும் அவர் பேசுகையில் தண்ணீர் பிரச்சனை தீர்க்க சிறந்த வழி சரியான முறையில் மழை நீரை சேமிப்பது மட்டுமே என்று கூறினார். 2003 இல் அரசாங்கம் மழை நீர் சேமிப்பு கட்டாயம் என கூறியது. அதன் படி 40 முதல் 50 சதவீத மக்கள் சரியாக மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்தினார். அதன் மூலம் 6 மீட்டர் நிலத்தடி நீர் உயர்ந்து காணப்பட்டது. அதன் பிறகு மழை நீர் சேமிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மூலம் மழை நீர் சேமிப்பு பற்றி விழுப்புணர்வு வர தொடங்கியுள்ளது. மேலும் அரசாங்கம் புதிதாக வரும் கட்டிடங்களில் மழை நீர் சேமிப்பை கட்டாயம் இருக்கும் வண்ணம் கவனிக்க வேண்டும் என கூறினார்.

அதேபோல் முன்னர் கிணறு போன்றவற்றால் நாம் தண்ணீர் தேவையை பார்த்து வந்தோம் ஆழ்த்துணை கிணறு என்னும் திட்டமே இல்லை. ஆனால் தற்போது கிணற்றுக்கள் மூடப்பட்டு அதிக அளவு ஆழ்த்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்த்துணை கிணறு நிலத்தின் மூன்றாவது அடுக்கிலிருந்து தண்ணீர் எடுப்பதால் அதை மழை நீர் சேமிப்பு மூலம் காப்பாற்ற முடியாது. தற்போது பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை ஆனால் கிணறுகளில் தண்ணீர் உள்ளது. வருங்காலத்தில் கிணறுகள் நம்மை காப்பாற்ற போகும் நிலத்தடி நீர் ஆதாரமாகும். தற்போது நாங்கள் அதிக அளவு கிணறுகள் எடுத்து வருகிறோம். இந்த காலத்திற்கு ஏற்றவாறு தற்போது கிணறுகள் அமைக்கப்படலாம் என கூறுகிறார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.