ETV Bharat / state

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை செய்திகள்

சென்னை: கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக இன்று (ஜன.31) முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain
மழை
author img

By

Published : Jan 31, 2021, 8:58 PM IST

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக இன்று (ஜன.31) முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

பிப்ரவரி மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

பிப்ரவரி 1 முதல் 3ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.