சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை (அக்.11) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஞாயிற்றுக்கிழமை வரை, ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னையில், அடுத்த 48 மணி நேரம் பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழைப்பதிவு: கன்னியாகுமரி மாவட்டத்தில், அதிகபட்சமாக குருந்தன் கோட்டில் 134 மிமீ., மழை பெய்திருந்தது. நாகர்கோவிலில் 97 மிமீ., கொட்டாரத்தில் 82, அடையாமடையில் 75, மயிலாடியில் 74, கோழிப் போர்விளையில் 73, மாம்பழத்துறையாறு மற்றும் இரணியலில் தலா 72 மிமீ., மழை பதிவாகி உள்ளது.
அதேபோல், ஆனைக்கிடங்கில் 70மிமீ., பாலமோரில் 62 மிமீ., முள்ளங்கினாவிளையில் 61 மிமீ., பூதப்பாண்டியில் 60மிமீ., தக்கலையில் 54 மிமீ., குழித்துறையில் 45 மிமீ., குளச்சல் மற்றும் சிவலோகத்தில் 38 மிமீ., களியலில் 37 மிமீ., திற்பரப்பு மற்றும் சிற்றாறு ஒன்றில் 35 மிமீ., மழை பதிவானது.
மேலும், கன்னியாகுமரியில் 30 மிமீ., பேச்சிப் பாறையில் 29 மிமீ., சுருளகோட்டில் 25 மிமீ., மழையும் பதிவாகியது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சராசரி மழை விகிதம் 53 மிமீ. மழைபதிவாகி உள்ளது. மேலும், தமிழகத்தில் குறைந்த அளவில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, ஆகிய இடங்களில் மழைப் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று மற்றும் நாளை, தென்தமிழக கடலோரப்பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதேப்போல், அரபிக்கடல் பகுதிகளான தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.