வெப்ப சலனம் காரணமாக இன்றும் நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வரும் நாள்களின் வானிலை நிலவரம்
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)
கோவில்பட்டி (தூத்துக்குடி) 9, மஞ்சளாறு (தஞ்சாவூர்), நத்தம் (திண்டுக்கல்) தலா 7, மதுரை விமான நிலையம் 6, சாத்தூர் (விருதுநகர்), காரியாபட்டி (விருதுநகர்), திருமங்கலம் (மதுரை), பெருந்துறை (ஈரோடு) தலா 5 , எட்டயபுரம் (தூத்துக்குடி), பெரம்பலூர், விருதுநகர் தலா 4, மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), மானாமதுரை (சிவகங்கை), பெரியாறு (தேனி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் விவேக்கிற்கு நெஞ்சுவலி: ஐசியுவில் தீவிர சிகிச்சை