கர்நாடகா முதல் கேரளாவரை 1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக, இன்று (மே 7) வட தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, தேனி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
(மே 8): வட தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, தேனி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
(மே 9): மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
(மே 10,11): மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடுவரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு:
மே 11 முதல் மே 13ஆம் தேதிவரை மேற்கு வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் கடலோரம் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூட்டும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 , குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):
பர்லியார் (நீலகிரி) 14,அலகாரி எஸ்டேட் (நீலகிரி) 8,போடிநாய்க்கனுர் (தேனி), குன்னூர் (நீலகிரி) தலா 7, பெரியகுளம் (தேனி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 4,சூரன்குடி (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) தலா 3 செ.மீட்டராகவும், சாத்தூர் (விருதுநகர்), சங்கரன்கோயில் (தென்காசி), பேரையூர் (மதுரை), மேட்டுப்பாளையம் , சத்தியமங்கலம் (ஈரோடு) தலா 2 செ.மீட்டராகவும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.