ETV Bharat / state

நாளை இரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! - tn weather

TN Rain Update: நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நீலகிரி, தேனி மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 4:23 PM IST

சென்னை: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 7ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (ஜன.3) அதே பகுதிகளில் நிலவுகிறது. மேலும், தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை (ஜன.4), தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மழை அளவு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கல் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இதில் அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்ட சிவலோகம் பகுதியில் 2 செ.மீ மழையும். பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி), சிற்றாறு-I, ராமநதி அணைப்பகுதி (தென்காசி), மாஞ்சோலை (திருநெல்வேலி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி) தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை வீசக்கூடும்.

வருகிற 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 3வது முறையாக ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி.. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.