சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை செல்லக்கூடிய ரயில் நேற்று(நவ.17) செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் பயணித்த இருவர் பாடல் பாடிக்கொண்டே மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை கண்ட சக பயணிகள் தொந்தரவு கொடுக்கும் வகையில் செயல்படுவதாக பாதுகாப்பு பணியில் இருந்த செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அதன் பேரில் மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட இருவரையும் ஆர்.பி.எப் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சோழிங்க நல்லூரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஸ்டீபன் ராஜ்(53) மற்றும் ஜான்ராஜ்(32) என்பது தெரியவந்தது. ரயிலில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக இருவர் மீதும் செங்கல்பட்டு ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.
இதையும் படிங்க: CCTV: சாமியார் வேடத்தில் வந்த ரவுடி: தெலுங்கு தேச நிர்வாகி மீது அட்டாக்