அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் வந்த நிலையில், சென்னை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் 2016 முதல் 2020 ஆம் ஆண்டு முதல் 28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 654 விழுக்காடு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.சி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.