ETV Bharat / state

இளங்கோவன் வீட்டில் ரெய்டு..தவறுகள் இருந்தால் நடவடிக்கை - அமைச்சர் ஐ. பெரியசாமி - 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி

பல்வேறு துறைகளில் இருந்து வந்த அறிக்கையின் அடிப்படையில் கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  சோதனை நடைபெற்று வருவதாகவும், தவறுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி  தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ. பெரியசாமி
அமைச்சர் ஐ. பெரியசாமி
author img

By

Published : Oct 22, 2021, 7:46 PM IST

சென்னை: சேத்துப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று (அக்.22) கலந்துகொண்டு கூட்டுறவு சங்க அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் துறை செயலாளர் நசீமுதீன், பதிவாளர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டனர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், " வாக்குறுதி அறிவித்தபடி சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் கடனை பொறுத்தவரை முறைகேடுகள் இல்லாமல் முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் ஐந்து சவரனுக்கு கீழ் நகைகடன் பெற்றவர்களுக்கான கடன் தள்ளுபடி குறித்த அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும். இதன் மூலம் 11 லட்சம் பயனாளர்கள் பலனடைவார்கள்.

2400 கோடி பயிர்கடன்

இதுவரை 2 ஆயிரத்து 400 கோடி அளவில் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள், சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் பயிர்கடன் அளிக்கப்பட்டுள்ளது.

சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டியை குறைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 கூட்டுறவு சங்கங்களில் 12 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதையடுத்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் ரூ.22 ஆயிரம் கோடி அளவில் கடன் தள்ளுபடி செய்திருப்பது இதுவே முதல்முறை. கூட்டுறவு துறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது, கிராமங்களில் 4 ஆயிரத்து 451 கூட்டுறவு வங்கிகள் ஆறு மாத காலத்திற்குள் கணினி மயமாக்கப்படும்.

தொழிற்கல்வி மாணவர்களுக்கு 1% வட்டியில் கடன்

கூட்டுறவு பண்டகசாலைகளில் தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவுத்துறையில் வெளிப்படைத் தன்மையோடு பணி நியமனம் நடைபெறும். கிராம கூட்டுறவு வங்கிகளில் கல்லூரி மாணவர்களை உறுப்பினர்களாக்கி கல்வி தகுதிக்கு ஏற்ப தொழிற்கல்வி மாணவர்களுக்கு தொழில் தொடங்க 1% வட்டியில் கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

பல்வேறு துறைகளில் இருந்து வந்த அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை பெற்றதும் தவறுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றவியல் நடவடிக்கை

போலியாக கடன் பெற்றவர்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுக்களின் விசாரணையில் 29% ஆய்வு முடிவடைந்துள்ளது. போலியான முறையில் கடன் பெற்றவர்கள், கடன் பெற துணையாக இருந்தவர்கள் என யாராக இருந்தாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகள் கணினி மயமாக்கப்பட்ட பிறகு கடன் பெற்ற விவரங்கள், அனைவரும் அறிந்துக்கொள்ளும் வகையில் இணையத்தில் வெளியிடப்படும் "என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’அண்ணாமலையுடன் நேரடியாக விவாதிக்க தயார் ’ - அமைச்சர் செந்தில் பாலாஜி சவால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.