ETV Bharat / state

ராகுல் காந்தி குறித்து கார்த்தி சிதம்பரம் பேசியது தவறு.. அவர் ஒரு பான் இந்தியா தலைவர் - மது கவுட் யாக்ஷி

Madhu Goud Yakshi: மதம் என்பது தனிநபர் விருப்பம், அதை யார் மீதும் திணிக்க முடியாது என அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான மது கவுட் யாக்ஷி ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 9:51 AM IST

சென்னை: ராகுல் காந்தியின் இரண்டாவது நடைபயணம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேச, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான மது கவுட் யாக்ஷி தமிழகம் வந்திருந்தார். அப்போது, சென்னியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில் பங்கேற்றார்.

அதன் பின்னர், தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் விவாதங்கள் குறித்து, ஈடிவி பாரத் தமிழுக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்ததார். அப்போது பேசிய அவர், "ராகுல் காந்தியின் நடைபயணம், முதன் முதலாக தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்றது. இதில் மக்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது, இரண்டாவது முறையாக, ஜனவரி 14ஆம் தேதி அன்று மணிப்பூரில் தொடங்கி, மார்ச் 20ஆம் தேதி மும்பையில் முடிவு அடைகிறது. மேலும், இந்த பயணம் 66 நாட்களில் 6,713 கி.மீ பயணமும், 110 மாவட்டங்கள் 15 மாநிலங்களில் நடைபெறுகிறது" என்று தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் நிலைபாடு? அதனைத் தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "நாங்கள், அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்கவில்லை. மேலும், மதம் என்பது தனிநபர் விருப்பம். அதை யார் மீதும் திணிக்க முடியாது.

ஒரு மதச்சார்பற்ற நாட்டில், இந்த மதத்தைதான் பின்பற்ற வேண்டும் என்று யாராலும் கூற முடியாது. ஆனால், அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. இதனால்தான், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது" என்று பதிலளித்தார்.

திமுகவின் சனாதன எதிர்ப்பு காங்கிரஸ்-க்கு பின்னடைவா? பின்னர், திமுகவின் சனதான எதிர்ப்பு வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக இருக்குமா என்று கேட்ட கேள்விக்கு, "திமுக என்பது ஒரு திராவிட கட்சி. மேலும் தமிழகத்தில் அனைத்து மதம் சார்ந்த மக்களுக்கும் திமுக ஆதரவாக செயல்பட்டு வருகிறது. கட்சியைச் சார்ந்த தனிநபரின் கருத்து, கட்சியின் ஒட்டுமொத்த கருத்தாக மாறிவிடாது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "யார் எந்த மதத்தை பின்பற்றுவது என்பது அரசியல் கட்சி முடிவு எடுக்க முடியாது. மேலும், மதத்தை அரசியல் ஆயுதமாக பயண்படுத்தக் கூடாது. ஆனால், பாஜக மதத்தை தன் ஆயுதமாக செயல்படுத்தி வருகிறது" எனத் தெரிவித்தார்.

'இந்தியா' கூட்டணியின் அடுத்த நகர்வு? பின்னர் 'இந்தியா' கூட்டணி பற்றிய கேள்விக்கு, "இந்தியா கூட்டணியில் இருக்கும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தொகுதி ஓதுக்கீடைப் பற்றி ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறன. முன்னதாக, 7 மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுக்கள் முடிவடைந்துள்ளன.

இதில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளன. மேலும், மாநிலத் தலைவர்கள் சிறப்பாக அவர்கள் பணிகளை செய்து வருகிறார்கள். காங்கிரஸ் எப்போதும் நட்பு ரீதியாகத்தான் செயல்படுகிறது" எனக் கூறினார்.

தொடர்ந்து ராகுல் காந்தி குறித்து கார்த்தி சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளித்த அவர், "ராகுல் காந்தி மக்களின் தலைவர், மேலும் இந்தியாவில் பல அரசியல் தலைவர்கள், ராகுல் காந்தி சிறந்த தலைவர் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். மோடிக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர் ராகுல் காந்திதான்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புலி வேட்டைக்கு போகும்போது எலிவேட்டை பற்றி பேச வேண்டாம் - ஓபிஎஸ் குறித்து செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.