சென்னை: ஸ்டாலின் தனது 23 ஆண்டுகால வாழ்க்கை வரலாறு பற்றி 'உங்களில் ஒருவன் - பாகம் 1' என்ற நூல் எழுதி அதை வெளியிட உள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா இன்று (பிப்ரவரி 28) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற நூலை வெளியிடுகிறார்.
நூல் வெளியீட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டின் நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விழாவிற்குத் தலைமை தாங்கி நடத்துகிறார். திமுக எம்பி கனிமொழி வரவேற்புரை அளிக்க உள்ளார்.
அழைப்பு விடுக்கப்பட்ட தலைவர்கள்
ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவிற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோருக்கும் - ரஜினி, கமல் ஹாசன் போன்ற திரையுலக ஜாம்பவான்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'வாழ்த்துகள், ஓயாது உழைத்திட ஊக்கம் தரும்!' - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்