நேற்று தமிழகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு தமிழில் மொழிப்பெயர்த்தார்.
அப்போது ஒட்டுமொத்த இன்ஸூரன்ஸ் துறையையும் நரேந்திர மோடி தன்னுடைய தன் தொழில்துறை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இதனை மொழிப்பெயர்த்த தங்கபாலு, நரேந்திர மோதி மக்களுக்காக அல்ல, தன்னுடைய நண்பர்களுக்காக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் என தவறுதலாக மொழிபெயர்த்தார்.
மேலும் ஜம்மு காஷ்மீரின் இன்ஸூரன்ஸ் துறை முழுவதும் அனில் அம்பானியிடம் கொடுக்கப்பட்டு விட்டது என ராகுல் காந்தி தெரிவித்தார். இதனை மொழிப்பெயர்த்த தங்கபாலு, நம்முடைய முக்கியமான பகுதியான ஜம்மு - காஷ்மீர் அனில் அம்பானிக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.
of course, நம்மை கலைஞர், காமராஜர் போன்ற பெரிய தலைவர்களுடன் ஒப்பிட முடியாது என்ற ராகுல்காந்தியின் உரையை, நான் தலைவர் கலைஞர் அவர்களை காமராஜருடன் ஒப்பிட மாட்டேன் என மொழிப்பெயர்த்து அனைவரையும் கொதிப்படையச் செய்தார். இதனைத்தொடர்ந்து அவரின் மொழிப்பெயர்ப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் மொழிப்பெயர்ப்பில் ஹெச்.ராஜாவை மிஞ்சிவிட்டார் தங்கபாலு என குறிப்பிட்டு வருகின்றனர்.