காங்கிரஸ்-திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தொகுதிகளை நேற்று அறிவித்தார். இதையடுத்து, நேற்று முதல் காங்கிரஸ் கட்சியினரிடம் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில், காங்கிரஸ் தலைவரானராகுல்காந்தி பெயரில் கன்னியாகுமாரி தொகுதிக்கு விருப்பமனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ்.அழகிரி, ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ராகுல்காந்தி உத்தர பிரதேசம் மாநிலத்திற்கு மட்டும் சொந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார்.ஆனால் கே.எஸ்.அழகிரியின் இந்த கோரிக்கையை ராகுல்காந்தி ஏற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் கரூர், சிவகங்கை, திருச்சி ஆகிய தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர், கார்த்திக் சிதம்பரம் போட்டியிட வேண்டும் என்று விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.தேனி தொகுதிக்கு ஜெ.எம். ஆருண் விருப்பமனு கொடுத்துள்ளார். ஆரணி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் விருப்பமனு கொடுத்துள்ளார்.