ETV Bharat / state

chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! - Vaikaipuyal Vadivelu

சந்திரமுகி 2 திரைப்படம் விநாயகர் சதுர்த்தியன்று‌ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 30, 2023, 10:15 AM IST

சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம், சந்திரமுகி. இதில் நடிகர்கள் பிரபு, வடிவேலு, நடிகை ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஒரு ஆண்டு காலமாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் பி.வாசு தனது 65வது படமாக ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி.எம்.கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைமை வகிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று‌ தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை படக்குழு ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்து உள்ளது.

இதனிடையே, ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி இருக்கும் சந்திரமுகி 2 படத்திற்கும், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் வித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமின்றி, தமிழில் நடிகர் ரஜினிக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது என்றே கூறலாம். ரீமேக் படமாக இருந்தாலும் தமிழுக்கு ஏற்றபடி பல்வேறு சுவாரஸ்யமான காட்சிகளை இணைத்திருந்தார் இயக்குநர் பி.வாசு. இந்தப் படத்தில் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முன்னாள் சபாநாயகர் தனபால் கதையா மாமன்னன்? - உண்மை நிலவரம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.