ETV Bharat / state

”எனது குரு ரஜினிகாந்த் உடன் இணைந்து அரசியலில் சேவை செய்வேன்” - லாரன்ஸ் உறுதி

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலைத் தொடங்கியதும் அவருடன் இணைந்து சேவை செய்வேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Raghava Lawrence says about political entry

author img

By

Published : Sep 5, 2020, 3:11 PM IST

நடிகர் ரஜினிகாந்த் உடன் அரசியலில் இணைந்து ஈடுபடவுள்ளது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்று நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தைப் பதிவு செய்திருந்தேன். அரசியலில் நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று.

இந்த அறிக்கையின் பின்னணியில் உள்ள காரணம், நான் பல சமூகப் பணிகளை செய்து கொண்டிருக்கும்போது, எனது நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள், அரசியல்வாதிகள் பலரும் என்னிடம் கேட்கிறார்கள், நான் அரசியலில் நுழைவதற்குதான் இதையெல்லாம் செய்கிறேனா என்று. மேலும் சிலர் என்னால் அரசியலில் நுழைந்தால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

கரோனா காலகட்டத்தில் நான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும் நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன். நான் எனது சேவையை எனது சொந்த வீட்டில் குழந்தைகளுக்காகத் தொடங்கினேன்.

எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பேன். அதற்கு எனக்கு அனைவரும் உறுதுணையாக இருந்துள்ளனர். கலைஞர், ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் போன்றோர் பல இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவியுள்ளனர். ஜெயலலிதா, எடப்பாடி.கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜய பாஸ்கர் எனப் பலர் பல்வேறு சேவைகளை செய்ய எனக்கு ஆதரவளித்துள்ளனர்.

நான் அரசியலில் நுழைந்தால் ஒற்றை மனிதனாகச் செய்வதைவிட அதிக சேவையைச் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் நான் அரசியலில் நுழையாததற்கு காரணம், எதிர்மறை அரசியலை நான் விரும்பாததுதான். என் அம்மாவுக்கும் அதே கருத்துதான்.

ஏனென்றால் நாம் எல்லோரைப் பற்றியும் மோசமாக பேச வேண்டும். பிறரைக் காயப்படுத்த நேரிடும். ஆனால் நான் அதை செய்யமாட்டேன். நான் அனைவரையும் மதிக்கிறேன்.

எனவே, யாராவது எதிர்மறை அல்லாத ஒரு கட்சியைத் தொடங்கினால், நாங்கள் மோசமாகப் பேசவோ அல்லது மற்றவர்களைப் புண்படுத்தவோ தேவையில்லை என்றால், அவர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய நான் எனது பங்களிப்பை அளிப்பேன்.

இந்தியாவில் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்ட அத்தகைய கட்சியை எனது குரு, தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அரசியல் காரணத்திற்காகவே இருந்தாலும் அவர் யாரையும் காயப்படுத்தவில்லை. எனவே, அவர் கட்சியைத் தொடங்கினாலும் ஒருபோதும் அவர் யாரையும் காயப்படுத்த மாட்டார்.

தலைவர் தனது ஆன்மீக அரசியலைத் தொடங்கிய பிறகு, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால், அவருடன் சேர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.