ETV Bharat / state

கரோனா இறப்பை குறைத்துக் காட்டவில்லை - ராதாகிருஷ்ணன்

கரோனா தொற்றால் ஏற்படும் இறப்பை குறைத்து காட்டவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Jul 3, 2021, 1:26 PM IST

Updated : Jul 3, 2021, 7:15 PM IST

சென்னை:ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கரோனா புறநோயாளிகள் பிரிவு, கட்டுப்பாட்டு மையம், இறப்பு சான்றிதழ் திருத்தம் மேற்கொள்ளும் மையம், படுக்கை வசதிகள் ஆகியவை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரோனா குறைந்தாலும், போர்க்கால அடிப்படையில் பணிபுரியவேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு சராசரியாக 1.6 லட்சம் மாதிரிகள் எடுக்கப்படுகிறது. தொற்று பாதிப்பு 4 ஆயிரத்து 200 என்ற அளவில் குறைந்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தால் தளர்வுகள் தொடரும். சமூக இடைவெளி, கை கழுவுதல், முகக்கசவம் அணிதல் உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மாவட்ட நிர்வாகங்கள் காய்ச்சல் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றன. கரோனா இறப்பை மறைப்பதாக சில இயக்கங்கள் கூறுவது போல் , எதுவும் நடைபெறவில்லை.

அரசின் சார்பில் வழங்கப்படும் இறப்பு சான்றிதழில் இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சான்றிதழில் இறப்பின் காரணம் மாற்றி எழுதப்பட்டிருந்தால், ஐசிஎம்ஆர் விதிகளின்படி கட்டளை மையம் மூலம் திருத்திக் கொள்ளலாம்.

மக்கள் டெங்குவை ஒழிக்க ஒத்துழைத்தது போல, அரசுடன் ஒத்துழைத்து உலகளாவிய கரோனா நோயை ஒழிக்கவேண்டும். தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கரோனாவால் 10 பேர் பாதிக்கப்பட்டனர். ஏப்ரல், மே மாதங்களிலேயே டெல்டா வகை கரோனா தமிழ்நாட்டில் வந்துவிட்டது.

கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்கிறோம். ஒரு சில மாவட்டங்களில் 5 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் 3 விழுக்காடாக குறைந்துள்ளது.” என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆய்வின்போது மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கரோனா தொற்றை கட்டுப்படுத்த வழிமுறைகள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Last Updated : Jul 3, 2021, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.