ETV Bharat / state

'எந்த சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் ரஜினிகாந்த்' - அர்ஜூனமூர்த்தி - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டிற்கு அறிமுகம் செய்த ரஜினிகாந்தின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என அர்ஜூனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Ra. Arjunamurthy
ரா. அர்ஜூனமூர்த்தி
author img

By

Published : Jan 27, 2021, 12:41 PM IST

நடிகர் ரஜினிகாந்த் குறித்து அர்ஜூனமூர்த்தி பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது; ரஜினிகாந்த் என்னை நாட்டிற்கு அறிமுகம் செய்தது அனைவருக்கும் தெரியும். உடல்நலக் காரணங்களால் அவர் அரசியலுக்கு வராமல் போனது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இச்செய்தி ரசிகர்கள், மக்கள் போல எனக்கும் மிகவும் வேதனையளித்தது.

இதனை ஈடுசெய்யும் வகையில் அவரின் நீண்டகால அரசியல் மாற்ற நினைவு நிச்சியமாக நிகழ வேண்டும் என பிரார்த்தனை செய்து, அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போ இல்லைனா எப்போது? என்ற அவரது நல்ல எண்ணம், அக்கறை நிறைவேறும் என நம்புங்கள்.

ரா. அர்ஜூனமூர்த்தி பத்திரிக்கை செய்தி
ரா. அர்ஜூனமூர்த்தி பத்திரிக்கை செய்தி

தற்போது தலைவர் ரஜினிகாந்த் ஒரு நடிகர். அவரது பெயருக்கும், தொழிலுக்கும் களங்கம் வரக்கூடாது என்ற காரணத்தால் அவரது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என விரும்புகிறேன். எனவே. என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டிற்கு அறிமுகம் செய்த அவரின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன்.

எந்த சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் ரஜினிகாந்த் தான். எனக்கு தலைவர் என்பதையும் தாண்டி அவரது ரசிகன் என்பதில் நான் பெருமைக்கொள்கிறேன். அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்ட பெயரை ஏற்படுத்த மாட்டோம். ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் மட்டும் போதும். அவரின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ’திராவிடத்தை வீழ்த்த இயலாது என அறிந்து ரஜினி பின்வாங்கிவிட்டார்’ - நாஞ்சில் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.