சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நேற்று (ஜூலை.8) திமுகவில் இணைந்தார். தொடர்ந்து கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் இன்று (ஜூலை.9) மரியாதை செலுத்தினார்.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,’கடந்த காலத்தில் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டிருக்கலாம். வருங்காலத்தில் நிச்சயம் திமுக கோட்டையாக மாறும். திராவிட சுயமரியாதை கொள்கை அடிப்படையில்தான் திமுவில் இணைந்தேன்.
சிறந்த நடிகர் கமல் ஹாசன்!
பதவிகளையும், பொறுப்புகளையும் எதிர்பார்த்து திமுகவில் இணையவில்லை. திமுகவின் வெற்றிக்காக, திமுகவுக்காக அயராது பாடுபடுவேன். முதலமைச்சர் ஏற்கனவே கூறியதுபோல வாக்களித்தவர்களைவிட வாக்களிக்காதவர்களுக்கு அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்வேன்’என்றார்.
கமல் ஹாசன் நடிகரா அல்லது அரசியல்வாதியா என்ற கேள்விக்கு, கமல் ஒரு சிறந்த நடிகர் மட்டுமே என்றார்.
இதையும் படிங்க: அப்போதே மகேந்திரன் வந்திருந்தால் கோவையையே வென்று இருப்போம் - ஸ்டாலின்