ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோ வாரண்டோ வழக்கு தாக்கல்! - ஈபிஎஸ்

Quo warranto: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்து, அவர் பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 7:02 AM IST

Updated : Oct 14, 2023, 7:14 AM IST

சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்புமனுவில் சொத்து, கல்வித் தகுதி உள்ளிட்ட விபரங்களை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், வேட்புமனுவில் சொத்துக்களையும், கல்வித் தகுதியையும் மறைத்த செயல் தவறான நடத்தை மட்டுமல்லாமல், ஊழல் நடவடிக்கையும் கூட எனத் தெரிவித்துள்ளார். வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விபரங்களை மறைத்ததுடன், இதுவரை எம்எல்ஏவாக பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்றும், சொத்து விபரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்கட்சித் தலைவராகவும், எம்எல்ஏவாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடுவதுடன், அவரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி விவகாரத்தில் அடிப்படை புரிதல் இல்லை" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

Last Updated : Oct 14, 2023, 7:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.