ETV Bharat / state

கேள்வித்தாள்கள் வெளியாகியும் தேர்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை!

author img

By

Published : Dec 23, 2019, 12:15 PM IST

Updated : Dec 23, 2019, 3:26 PM IST

சென்னை: முன்கூட்டியே வெளியான கேள்வித் தாள்களை வைத்து பள்ளிக் கல்வித் துறை தேர்வினை நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

question paper out
question paper out

அரையாண்டுத் தேர்வின் கடைசி நாளான இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வும், 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல் தேர்வும் காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மூன்று பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் முழுமையாக சமூக வலைதளத்தில் நேற்றிரவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

question-paper-out
சமூக வலைதளங்களில் வெளியான கேள்வித்தாள்கள்

சமூக வலைதளத்தில் வெளியான கேள்வித்தாள்களில், அந்த நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் துணை இல்லாமல் இது போன்று முன்கூட்டியே கேள்வித்தாள்கள் வெளியாக வாய்ப்புகள் இல்லை. அரையாண்டுத் தேர்விற்கான வினாத்தாள்களையே பாதுகாப்பான முறையில், அளிக்க முடியாத கல்வித்துறை முழு ஆண்டுத் தேர்வினை எவ்வாறு நடத்தப் போகிறது எனக் கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு மொபைல் ஆப் மூலம் 9ஆம் வகுப்பு தமிழ், 12ஆம் வகுப்பு வேதியியல் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதே செயலியில் இன்றையத் தேர்வு கேள்வித்தாள்களும் தற்போது வெளியாகியுள்ளன.

question-paper-out
மாணவர்களுக்கு தேர்வறையில் வழங்கப்பட்ட கேள்வித்தாள்கள்

இதுகுறித்து கல்வித்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், மீண்டும் கேள்வித்தாள்கள் வெளியாகியிருப்பது கல்வித்துறையை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முன்னதாக, கடந்த 13ஆம் தேதியிலிருந்து மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.

இதையும் படிங்க: வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வள்ளுவரை சாகடிக்கின்றனர் - ஒய்.ஜி. மகேந்திரன்

Intro:
முன்கூட்டியே வெளியான கேள்வித்தாளை
வைத்து தேர்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறைBody:
முன்கூட்டியே வெளியான கேள்வித்தாளை
வைத்து தேர்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை

சென்னை,

10, 11,12 ம்   வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடக்கவிருந்த அரையாண்டு கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியானது. ஆனாலும் அந்த கேள்வித்தாள்களை வைத்தே பள்ளிக்கல்வித்துறை தேர்வினை நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரையாண்டு தேர்வின் கடைசி நாளான இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல் தேர்வு நடக்க இருந்த நிலையில்,  இந்த மூன்று படங்களுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இதனால் கல்வித்துறை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 13 ஆம் தேதியிலிருந்து மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.  கடைசி நாளான இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல் தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த மூன்று படங்களுக்கான கேள்வித்தாள்கள் முழுமையாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூகவலைதளத்தில் வெளியான கேள்வித்தாளில் அந்த நிறுவனத்தின் முத்திரையும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் துணை இல்லாமல் இது போன்று முன்கூட்டியே கேள்வித்தாள் வெளியாக வாய்ப்புகள் இல்லை.
அரையாண்டுத் தேர்விற்கான வினாத்தாள்களையே பாதுகாப்பான முறையில் அளிக்க முடியாத கல்வித்துறை முழு ஆண்டுத் தேர்வினை எவ்வாறு நடத்தப் போகிறது என கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே, குறிப்பிட்ட ஒரு மொபைல் அப்ளிகேஷன் மூலம் 9 ம் வகுப்பு தமிழ் மற்றும் 12 ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வெளியானது.
இதே செயலியில் தான் இன்றைய தேர்வு கேள்வித்தாள்களும் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கல்வித்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் கேள்வித்தாள்கள் வெளியாகியிருப்பது கல்வித்துறையை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Conclusion:
Last Updated : Dec 23, 2019, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.