ETV Bharat / state

Compulsary quarantine:வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமை படுத்துதல் கட்டாயம்

Compulsary quarantine:வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Compulsary quarantine:வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமை படுத்துதல் கட்டாயம் - மா.சு

author img

By

Published : Dec 25, 2021, 5:38 PM IST

சென்னை: Compulsary quarantine: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கரோனா நோயாளிகள் பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.

30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஓமைக்ரான் பாதிப்பு:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1.5 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளது. கடந்த மே மாதம் 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பில் இருந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு தற்போது 1400 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்ஸிஜன் உற்பத்தி வசதிகள் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 12 பேர் ஒமைக்ரான் பதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்த்து கொள்வது அவசியம்.

தனிமைப்படுத்துதல் கட்டாயம்

அதிக பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவருக்கும் ஏற்கனவே 100% கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமைப் படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்பில்லாத நாடுகளிலிருந்து வரும் வெளிநாடு பயணிகளிடம் சோதனை விகிதம் 2 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு நலம்..!:

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த ஒருவருக்கு கரோனாத் தொற்று கண்டறியப்பட்டு அவருடன் தொடர்பில் இருந்த 3338 பேருக்கு பரிசோதனை செய்ததில் 54 பேருக்கு கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 39 பேருக்கு ’எஸ் ஜீன் ட்ராப்’ உள்ளது.

தடுப்பூசி செலுத்தம் பணிகள் மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு விரைவில் தமிழ்நாடு வருகிறது. நாளை தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். கரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு நலமாக உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் " என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வேலூரில் 3ஆவது முறையாக நில அதிர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.