ETV Bharat / state

118 பீரங்கி வாகனம் வாங்க ஆர்டர்: தற்சார்பு இந்தியா இலக்கிற்கு மேலும் வலிமை! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் உள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 118 அர்ஜுன் எம்கே-1 ஏ பீரங்கி வாகனத்துக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆர்டர் கொடுத்துள்ளது.

பீரங்கி வாகனம் வாங்க ஆர்டர்
பீரங்கி வாகனம் வாங்க ஆர்டர்
author img

By

Published : Sep 24, 2021, 6:21 AM IST

Updated : Sep 24, 2021, 9:52 AM IST

சென்னை: இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய ராணுவத்துக்காக சென்னையில் உள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 118 அர்ஜுன் எம்கே-1 ஏ பீரங்கி வாகனத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று (செப்.23) ஆர்டர் (கொள்முதல் ஆணை) கொடுத்துள்ளது.

இதன் மதிப்பு ரூ.7,523 கோடி ரூபாய் ஆகும். இந்த ஆர்டர் பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியா முயற்சிக்கு மேலும் ஊக்குவிப்பை அளிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா இலக்கை அடைய இது மிகப் பெரிய நடவடிக்கையாகும்.

சென்னையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று, அர்ஜுன் எம்கே-1 ஏ பீரங்கி வாகனத்தை ராணுவத் தளபதி எம்.எம். நரவணேவிடம், பிரதமர் ஒப்படைத்தார்.

72 புதிய அம்சங்கள்

நவீன பீரங்கி வாகனம் எம்கே-1 ஏ, அர்ஜுன் பீரங்கி வாகனத்தின் புதிய வகை. தாக்குதல், இயக்கம், நிலைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய பீரங்கி வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்கே-1 வகை பீரங்கி வாகனத்துடன் ஒப்பிடுகையில் 72 புதிய அம்சங்கள் - உள்நாட்டு உபகரணங்களும், எம்கே-1 ஏ பீரங்கி வாகனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த பீரங்கி வாகனம், அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் எளிதாகச் செல்வதை உறுதிசெய்யும். அத்தோடு, பகலிலும் இரவிலும் துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறன் படைத்தது. இந்தப் பீரங்கி வாகனத்தை, பல மேம்பட்ட வசதிகளுடன் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

எதிரிகளைத் தாக்கும் திறன்

எம்கே-1 ஏ பீரங்கி வாகனம் துல்லியமாகத் தாக்கும் திறன் வாய்ந்தது. அனைத்து நிலப் பகுதிகளிலும் எளிதாகச் செல்லும் திறன் வாய்ந்தது - மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகளுடன் பல அடுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது.

இரவிலும் பகலிலும் ஒரே இடத்தில் நின்றுகொண்டும், இயங்கிக் கொண்டும் எதிரிகளைத் தாக்கும் திறன் படைத்தது. இந்தத் திறன்களுடன், இந்த உள்நாட்டுப் பீரங்கி வாகனம், உலகத் தரத்துக்கு இணையாக இருக்கும்.

இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்ப இந்தப் பீரங்கி வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் எல்லைகளைத் திறம்படப் பாதுகாக்க, இந்த பீரங்கி வாகனம் பொருத்தமானதாக இருக்கும்.

சுமார் 8,000 பேருக்கு வேலை

ஆவடி கனரக தொழிற்சாலையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி ஆர்டர் மூலம், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் உள்பட 200 இந்திய நிறுவனங்களுக்குத் தொழில் வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் சுமார் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் உள்நாட்டுத் திறனை வெளிப்படுத்தும் ஒரு முதன்மைத் திட்டமாக இது இருக்கும்.

இந்த அர்ஜுன் எம்கே-1 ஏ பீரங்கி வாகனத்தை, போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ), டிஆர்டிஓ-வின் இதர ஆய்வகங்களுடன் இணைந்து இரண்டு ஆண்டுக்குள் உருவாக்கியது.

இந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் 2010 ஜூன் மாதம் தொடங்கின. இந்தப் பீரங்கி வாகனம் 2012 ஜூன் மாதம் பரிசோதனைக்கு விடப்பட்டது. அர்ஜுன் எம்கே-1ஏ பீரங்கி வாகனத்தை உருவாக்கி பரிசோதனைக்கு அனுப்ப இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆனது.

பீரங்கி வாகனம் பயணம்

இது பல கட்டங்களாக விரிவான பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. 2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையில் 7000 கி.மீ. மேற்பட்ட தூரம் இந்தப் பீரங்கி வாகனம் பயணம் செய்துள்ளது. இதில் பல வகையான ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம்: அடுத்த வாரத்தில் வல்லுநர் குழு - உச்ச நீதிமன்றம்

Last Updated : Sep 24, 2021, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.