ETV Bharat / state

அப்பளம் கேட்ட கணவன் மீது எண்ணெய் ஊற்றிய மனைவி.. தண்டனையை குறைத்து விடுதலை.. - Madras High Court reduced sentence for girl

உணவுக்கு அப்பளம் பொறித்து தருவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வழக்கில் மனைவிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அப்பளம் பொறித்து தருவதில் தகராறு: கணவனை கொன்ற பெண்ணுக்கு தண்டனை குறைப்பு!

author img

By

Published : Jan 17, 2023, 4:10 PM IST

Updated : Jan 17, 2023, 4:16 PM IST

சென்னை: கிருஷ்ணகிரியை சேர்ந்த நபர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு உணவின் போது, கணவர் அப்துல் ரசித், மனைவியிடம் அப்பளம் பொரித்து தருமாறு கேட்டுள்ளார்.

அப்பளம் தருவதற்கு தாமதமானதால் அவர் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி , கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவர் 28 நாட்களுக்கு பின் உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம், மனைவிக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆயிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை, உயிரிழந்தவரின் உறவினர்கள் அளித்த சாட்சியின் அடிப்படையிலேயே தண்டனை அளிக்கப்பட்டதாகவும் வாதிட்டார்.

இதை ஏற்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் காயங்களுடன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அப்துல் ரசீத்திடம் போலீசார் வாக்குமூலம் பெறவில்லை, பிரேத பரிசோதனை தவிர வேறு எந்த மருத்துவ ஆவணங்களும் தாக்கல் செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சம்பவம் நடந்து 28 நாட்களுக்கு பிறகே கணவர் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கு சிகிச்சை குறைபாடு உள்ளிட்ட வேறு பல காரணங்களும் இருந்திருக்கலாம் என்பதால், இந்த வழக்கில் மனைவி ஏற்கனவே அனுபவித்த சிறை தண்டனையே போதுமானது எனக்கூறி கீழமை நீதிமன்றம் விதித்த ஐந்தாண்டுகள் சிறை தண்டனையை குறைத்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிங்க:கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு.. குழந்தை உள்பட 6 பேர் படுகொலை..

Last Updated : Jan 17, 2023, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.