ETV Bharat / state

மாணவியை கடத்தியதால் ஆயுள் சிறை பெற்றவருக்கு தண்டனை குறைப்பு - ஈரோடு மாவட்ட செய்திகள்

பத்தாம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Punishment Reduced for Minor Girl Abused Criminal

author img

By

Published : Mar 26, 2022, 4:43 PM IST

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்ற விஜயகுமார் என்பவர், அப்பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

பின்னர் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக மாணவியின் பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் விஜய்குமார் மற்றும் அவருக்கு தங்க இடமளித்து, உதவி செய்ததாக அவரது நண்பர்கள் ரமேஷ், ஜோசப் ராஜா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம், விஜயகுமாருக்கு குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின்கீழ் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

தண்டனை குறைப்பு: மேலும், விஜயகுமாரின் நண்பர்களான ரமேஷ், ஜோசப் ராஜா ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புகளை எதிர்த்து மூவர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி நக்கீரன் அமர்வு, விஜயகுமாருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை உறுதி செய்தும், ஆயுள் தண்டைனையை செய்து 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டுள்ளனர்.

விஜயகுமாரின் நண்பர்களான ரமேஷ், ஜோசப் ராஜா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் ரத்து செய்த நீதிபதிகள், அதை 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மறைமுக தேர்தலில் திமுக- அதிமுக இடையே மோதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.