ETV Bharat / state

களப் பணியாளர்களுக்கு புதிய கருவிகள் விநியோகம் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை : வீடுகள் தோறும் சென்று பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக காய்ச்சல் கண்டறியும் வெப்பநிலை மானி மற்றும் பல்ஸ் ஆக்ஸ்மீட்டர் (pulse oximeter) கருவிகள் களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

prakash
prakash
author img

By

Published : Jun 18, 2020, 9:44 PM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வார்டு ஒன்றுக்கு இரண்டு மருத்துவ முகாம்கள் வீதம், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்பட, 680 மருத்துவ முகாம்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், வீடுகள் தோறும் சென்று பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும், மருத்துவ முகாம்களில் பயன்படுத்துவதற்காகவும் 15 மண்டலங்களில் காய்ச்சல் கண்டறியும் பத்தாயிரம் வெப்பமானிகள் களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து களப் பணியாளர்களுக்கும் இருதயம், நாடித்துடிப்பை அறிய உதவும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்கவும் மாநகராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஆயிரம் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் தண்டையார் பேட்டை, ராயபுரம், திருவிக நகர் ஆகிய இடங்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவியை பயன்படுத்தி மருத்துவ முகாமுக்கு வரும் நபர்களின் நாடித் துடிப்பு, சுவாச நிலை ஆகியவற்றை பரிசோதிக்க முடியும். இதனால் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளை ஆரம்ப நிலையிலே கண்டறிய முடியும் எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடல்: மாநகராட்சி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.