சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்-யின் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்-யை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் பிப்.4ஆம் தேதி சந்தித்து உரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது என்ன உரையாடினார்கள், அரசியல் பேசப்பட்டதா என்பது தொடர்பான எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
எனினும் விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கவனம் செலுத்திவருகின்றனர். தூத்துக்குடியில் மட்டும் விஜய் மக்கள் இயக்கம் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறது என பில்லா ஜெகன் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ரங்கசாமி, விஜய் சந்திப்பு பல்வேறு அரசியல் யூகங்கள் வெளியாக காரணமாகியுள்ளது.
இதையும் படிங்க:சூரி அளித்த பண மோசடி புகாரில் உத்தரவு; விஷ்ணு விஷால் தரப்பு அதிர்ச்சி