சென்னை: Dumping poultry waste in Arafath Lake: ஆவடி திருமுல்லைவாயல் பகுதியில் சி.டி.ஹெச் சாலையில் அராபத் ஏரி அமைந்துள்ளது.
சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சுருங்கி காணப்படுகின்றது.
அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இந்தநிலையில் ஏரியில் அடையாளம் தெரியாத நபர்கள் இறந்த கோழி இறைச்சிகளைக் கொட்டிச் செல்கின்றனர்.
இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது என்றும் நீர் பாதிப்படைகிறது என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனைத் தடுக்க ஆவடி மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஏரியை சீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: Request to set up Medical University : மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரிக்கை