ETV Bharat / state

மருத்துவரிடம் ஹாண்ட்பேக் பறிப்பு - கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்! - chennai latest news

சென்னை: அரசு பெண் மருத்துவர் ஒருவரிடமிருந்து ஹாண்ட்பேக்கை பறித்துக் கொண்டு தப்பியோடிய கொள்ளையர்களை பொதுமக்கள் துரத்திப் பிடித்துள்ளனர்.

chennai
author img

By

Published : Oct 11, 2019, 12:34 PM IST

சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிப்புரிந்து வருபவர் ரித்து (23). இவர் நேற்றிரவு கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையிலுள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, வாசலில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு இரண்டு இருசக்கரத்தில் வந்த நான்கு பேர் ரித்துவின் ஹேண்ட்பேக்கை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர். இதனால் ரித்து கூச்சலிடவே அருகிலிருந்த பொதுமக்கள் கொள்ளையர்களைத் துரத்திச்சென்றனர்.

துரத்திச் சென்றதில், இரண்டு கொள்ளையர்கள் ஈ.வே.ரா. சாலை அருகே சிக்கிக்கொண்டனர். பின்னர், அவர்கள் இருவரையும் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பின்னர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில், அவர்களின் பெயர்கள் அஜய் (20), ஹரிஷ் குமார் (18), அஜித்குமார் (22), சிவா (20) என்பது தெரியவந்தது. இதனடிப்படியில், தப்பியோடிய மற்ற இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடமிருந்து ஹேண்ட்பேக்கை மீட்டு ரித்துவிடம் ஒப்படைத்தனர். மேலும், ஹேண்ட்பேக்கில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்ஃபோன், பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

பள்ளி தலைமையாசிரியையிடம் 8 சவரன் நகை பறிப்பு

Intro:Body:அரசு பெண் மருத்துவரிடம் இருந்து 50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் பணம் பறிப்பு.

கொள்ளையனை துரத்தி பிடித்த பொதுமக்கள்.

சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிப்புரிந்து வருபவர் ரித்து (23).இவர் நேற்று இரவு கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு தனது நண்பருடன் பேசி கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியே இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ரித்துவின் கையில் இருந்த கைப்பையை பறித்து சென்றுள்ளனர்.இதனால் ரித்து கூச்சலிடவே அருகிலிருந்த பொதுமக்கள் அந்த மர்ம நபர்களை துரத்தி சென்று ஈ.வி.ஆர் சாலை சந்திப்பில் இரண்டு மர்ம நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பின்னர் தப்பி சென்ற இரண்டு மர்ம நபர்களையும் போலிசார் கைது செய்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் அஜய் 20,ஹரிஷ் குமார் (18),அஜித்குமார்(22),சிவா(20) என்பது தெரியவந்தது.மேலும் பெண்மணியிடம் பறித்து சென்ற கைப்பையை போலிசார் பறிமுதல் செய்தனர்.ஏற்கெனவே இவர்கள் மீது அயனாவரம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.