பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறுகிறது.
இது குறித்து அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாதந்தோறும் முதல் வெள்ளி, மூன்றாம் வெள்ளி, ஐந்தாம் வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு மருத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
வயது வந்த இளம்பெண்கள் சமீப காலங்களாக மாதவிடாய் சுழற்சியில் அதிகப்படியான மாற்றங்களைச் சந்தித்துவருகின்றனர். மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய், அதிக ரத்தப் போக்கு, விட்டுவிட்டு வரும் மாதவிடாய் என்று ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையை அதிகளவில் சந்தித்துவருகின்றனர்.
மாதவிடாய் கோளாறுகள் குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையில், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் ஸ்ரீவித்யா நாளை (20 ஆம் தேதி) மாலை 3 மணியளவில் மருத்துவ விழிப்புணர்வு செய்கிறார்.
மாதவிடாய் நிற்கும் நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன என்றும், அதற்கு நம்மை எப்படி தயார்ப்படுத்திக் கொள்வது என்றும், இந்த சுழற்சியில் ஏன் மாற்றம்? காரணம் என்ன? அவை உண்டாக்கும் பிரச்னைகள் என்ன? மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன? என்று விளக்கங்கள் அளித்து கலந்துரையாட உள்ளார். இந்தக் கூட்டத்திற்கு அனுமதி இலவசமாகும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க : போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் - மாணவர்கள் ஆர்வம்!