திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் நடைபெறும் முதல் இ-பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஆக.13) கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் திமுக அரசின் தொலைநோக்குத் திட்டங்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து வருகிறார்.
இந்நிலையில், பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பெட்ரோல் மீதான வரி குறைப்பால் ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது" என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒன்றிய அரசின் கடமை. ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன. பெட்ரோல், டீசல் வரி உயர்வால் ஒன்றிய அரசுக்கு 69 விழுக்காடு வருவாய் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்கு குறைந்த அளவே வரி வருவாய் பிரித்து அளிக்கப்படுகிறது எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட்: பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு