திமுக ஆட்சியமைந்தவடன் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் திமுக அரசின் தொலைநோக்குத் திட்டங்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
அந்தவகையில், சட்டப்பேரவையில் பேசிய அவர், "தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்படும். தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோட் எழுத்துரு அனைத்து அரசு துறைகளில் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.
உலக அளவிலான செவ்வியல் இலக்கிய படைப்புகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும். தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் உரை: மீண்டும் வழங்கப்பட உள்ள ’கலைஞர் செம்மொழித் தமிழ் விருது’!