ETV Bharat / state

ஆண்களின் பிறப்புறுப்பை அறுக்கும் தன்பால் ஈர்ப்பு சைக்கோ! - male penis

சென்னை: மாதவரத்தில் இரண்டு ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்த சைக்கோ இளைஞன் குறித்து தகவல் தெரிந்தால் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளக் கோரி காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அணுறுப்பை அறுத்த இளைஞர்
author img

By

Published : Jun 12, 2019, 7:57 AM IST

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா. இவர் மே 26ஆம் தேதி பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் தங்கி பணியாற்றிவரும் கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயண பெருமாள் என்பவரும் பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்துவந்த காவல் துறையினர் சிகிச்சைப் பெற்று வந்த நாராயண பெருமாளிடம் விசாரணை நடத்தினர். அதில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரெட்டேரி பாலம் அருகே தன்னை மிரட்டி தன்பால் புணர்ச்சியில் ஈடுபட்டதாகவும், அவருடைய இச்சை தீர்ந்த பின் தனது பிறப்புறுப்பை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவித்தார்.

சிசிடிவியில் பதிவாகியுள்ள சைகோ இளைஞன் உருவம்

அவர் கொடுத்த தகவலின் பேரில் மாதவரம் தனிப்படை காவல் துறையினர், ரெட்டேரி பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என தெரியவந்தது.

மேலும் அவரின் செயல்பாடுகள் சைக்கோ நபரை போல் உள்ளதால், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. அந்த சைகோ இளைஞனை நேரில் பார்த்தாலோ? அல்லது தகவல் தெரிந்தாலோ? காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை மாதவரத்தில் 2 ஆண்களின் மர்ம உறுப்பை அறுத்த சைக்கோ இளைஞரின் அடையாளம் தெரிந்தது. இவரை பற்றி தகவல் தெரிந்தால் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

சென்னை  மாதவரத்தில் கடந்த மாதம் 26ம் தேதி அஸ்லம்பாஷா என்பவர் ஆணுறுப்பு அறுபட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ்உயரிழந்தார்.  முதலில் மன அழுத்தம் காரணமாக அஸ்லாம்பாஷாவே தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டார் என தகவல் பரவியது.  ஆனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்துமாதவரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில நாட்களிலேயே சென்னையில் தங்கி பணியாற்றும் கூடங்குளத்தை சேர்ந்த நாராயண பெருமாள், இதேபோல் ஆணுறுப்பு அறுபட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரெட்டேரி பாலம் அருகே தன்னை மிரட்டி ஓரினசேர்க்கையில் ஈடுபட்டதாகவும், அவருடைய இச்சை தீர்ந்த பின தனது ஆணுறுப்பை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் நாராணயபெருமாள் தெரிவித்துள்ளார்.

மாதவரம் தனிப்படை போலீசார், அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது , 2 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஓரே நபர் என தெரியவந்தது. அவரின் செயல்பாடுகள் சைக்கோ நபரை போல் உள்ளது.

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.இவரை பார்த்தாலோ? இவரை பற்றி தகவல் தெரிந்தாலோ ? 9444020007 அல்லது காவல் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.