சென்னை: காவல் துறை பயிற்சியாளர்களுக்கான மனநல வாழ்வியல் பயிற்சிப் பயிலரங்கம், காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (செப். 20) நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு தலைமை தாங்கினார்.
இதில் காவல் துறைப் பயிற்சியாளர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சியை, மனநல மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் பிரதிமா மூர்த்தி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். சைலேந்திரபாபு, பயிற்சி கையேட்டை வெளியிட்டு தொடக்க உரையாற்றினார்.
அப்போது இனிவரும் காலங்களில் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் தகுதியைப் பெரும் வகையில், காவல் துறையில் பயிற்சி ஆசிரியர்களை உருவாக்குவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு காவல் துறை நலன்சார்ந்த பிரிவின் கூடுதல் இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ், காவல் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட துறை ரீதியான அலுவலர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: உயர் நீதிமன்ற வளாக பாதுகாப்புக் காவலர் தூக்கிட்டு தற்கொலை