சென்னையில் 39 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களுக்கு இலவசமாகத் தானியங்கி முறை மூலம் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் சேவையை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இன்று (பிப்.23) தொடங்கி வைத்தார்.
இந்த சேவை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், ரோட்டரி சங்கம், ஜியோ இந்தியா பவுன்டேசன் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் பிரதீப் யாதவ், ஜியோ இந்தியா நிறுவனர் பிரியா ஜெமிமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்கெனவே சென்னை மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பெண்களுக்கு எனத் தனிப்பெட்டிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மெட்ரோவில் பயணித்த ராயபுரத்தின் செல்ல பிள்ளை ஜெயக்குமார்