ETV Bharat / state

பயிற்சி மருத்துவர்களின் உழைப்பை சுரண்டுவதா? மருத்துவர்கள் போராட்டம்

author img

By

Published : Mar 31, 2021, 8:34 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு, பயிற்சி மருத்துவர்களின் உழைப்பை கடும் சுரண்டலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது எனவும், இன்று பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பயிற்சி மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மருத்துவர்கள் சங்கம் போராட்டம்  பயிற்சி மருத்துவர்கள் போரட்டம்  தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம்  தமிழ்நாடு முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் போரட்டம்  Protest of trainee doctors across Tamil Nadu  Trainee Doctors Protest  Trainee Doctors  Doctors Association Protest
Trainee Doctors Protest

தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், கூடுதலாக மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுவருகின்றன. ஆனால், கடந்த ஒரு வருடமாகப் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி முடித்து சுமார் ஆயிரத்து 500 பேர் வெளியே செல்வதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

இதனை சமாளிப்பதற்காக பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு பயிற்சி மருத்துவர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கூறியுள்ளதாவது,

”தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் 2015ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து மார்ச் 29ல் ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவர்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதியளித்து, ஒரு அறிவிப்பை மார்ச் 26 அன்று வெளியிட்டது. ஆனால் மார்ச் 30 மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தற்போது ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி முதல் இறுதியாண்டு தேர்வு எழுத இருக்கின்றனர். அவர்கள் தேர்வு முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியாகி பயிற்சி மருத்துவராக சேரும் வரை,2020 மார்ச் 29 முதல் 2021 மார்ச் 28வரை ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு காலவரையின்றி செய்யப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளை மருத்துவ கல்வி இயக்ககம் எடுப்பது சரியல்ல. இது இளம் மருத்துவர்களின் உழைப்பை குறைந்த ஊதியத்தில் சுரண்டுவதாகும். இத்தகைய செயலை தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இந்த அறிவிப்பு பட்ட மேற்படிப்பு தேர்வுக்கும், இதர போட்டித் தேர்வுகளுக்கும் இந்த மாணவர்கள் தயாராவதில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தையும் பாதிக்கும்.

ஆகவே ,தமிழ்நாடு அரசும், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குநர் இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு 2021 மார்ச் 29 பயிற்சி மருத்துவர் பயிற்சியை முடித்த, மருத்துவர்களுக்கு உடனடியாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து தர வேண்டும். மார்ச் 2021ல் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த 2015 எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு உடனடியாக மருத்துவ அலுவலராகப் பணி நியமனம் செய்து மருத்துவ அலுவலருக்கு வழங்கப்படும் அதே ஊதியத்தை வழங்கிட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி , தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்கள் மார்ச்.31 காலை 10 மணியளவில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது மக்களுக்கு செய்யும் துரோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.