சென்னை: அரசின் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறைகளைச்சார்ந்த வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் ஒதுக்கீடு செய்யப்பட்டால் வாடகை விலக்கு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்திற்குச்செலுத்தப்பட வேண்டிய முன் வைப்புத்தொகை, பாதுகாப்புத்தொகையின்றியும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிமம் வழங்கப்படும். ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை மையம் அமைக்கும் திட்டத்தால் ஆண்டுதோறும் 200 மாற்றுத்திறனாளிகள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பள்ளி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அரசுப்பள்ளி மாணவி - கள்ளக்குறிச்சி போல மற்றொரு அதிர்ச்சி சம்பவம்!