ETV Bharat / state

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் : அதிரடி நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நேற்று வரை 17.89 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.29,04,201 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் : மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் : மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
author img

By

Published : Mar 30, 2022, 11:18 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வகை பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக வாழையிலை பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை உட்பட 12 வகையான பொருட்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், மேலும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் திருவிக.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (மார்ச்.29) மட்டும் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 289 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1 ஆம் முதல் நேற்று வரை 40,338 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 17.89 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.29,04,201 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க் பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: கோவையில் தொடர்ந்து யானைகள் உயிரிழப்பு - நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.