ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் வேலை! - Temporary Professor

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மண்டலக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 71 தற்காலிக பேராசிரியர் பணிக்கு ஜூன்18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாப் பல்கலைகழகம்
author img

By

Published : Jun 16, 2019, 7:47 PM IST

Updated : Jun 17, 2019, 5:28 PM IST

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 3 மண்டலக் கல்லூரிகள், 13 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாதிரி விண்ணப்படிவம்
மாதிரி விண்ணப்பப் படிவம்

தகுதியானவர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளுடன் வருகிற 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். கல்வித் தகுதியை பொறுத்தவரையில் தொழிற்கல்வி படிப்பில் முதுகலையும், பட்டப்படிப்பில் 75 விழுக்காடுடன் முதுகலை மற்றும் எம்.பில் பட்டமும் பெற்றிருக்கவேண்டும்.

அதிகளவில் விண்ணப்பம் பெறப்பட்டால் தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் ஒன்று தயார் செய்து நேர்காணல் மூலம் தகுதியான தற்காலிக பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஊதியமாக ரூ. 20ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:அண்ணாப் பல்கலைக் கழகத்தில்
71 தற்காலிக ஆசியர்கள் வேலை

Body:

சென்னை,
அண்ணாப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 3 மண்டலக் கல்லூரிகள், 13 பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் 71 தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு 18 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாப் பல்கலைக் கழக கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணாப் பல்கலைக்கழகத்தின் 3 மண்டலக் கல்லூரிகள், 13 பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் பல்வேறுத் துறைகளில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்தகுதியாக இளங்கலை,முதுகலைப்பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்சி ஆகியவற்றில் எம்.எஸ், அண்ணாப் பல்கலைக்கழகத்தில் எம்.இ., எம்.டெக். பட்டம் பெற்றவர்களின் கல்வித்தகுதி எடுத்துக் கொள்ளப்படும்.

சிவில் இன்ஜினியரிங் 21 பணியிடங்களும், ஜியோ இன்பர்மேட்டிக் இன்ஜினியரிங் 6 பணியிடங்களும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 4 பணியிடங்களும், கம்ப்யூட்டர் அறிவியியல் மற்றும் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பத்தில் 5 பணியிடங்களுக்கும் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக். முடித்தவர்களும், கணக்கு பாடத்தில் 14 பணியிடம், இயற்பியல் பாடத்தில் 6 பணியிடத்திற்கு பி.எஸ்சி, எம்.எஸ்சி, எம்.பில் படிப்பினை முடித்தவர்களும், ஆங்கிலப் பாடத்தில் காலியாக உள்ள 15 பணியிடத்திற்கு பி.ஏ, எம்.ஏ, எம்.பில்.ஆங்கிலம் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பில் 75 சதவீத மதிப்பெண் அல்லது சிஜிபிஏ என்ற புள்ளியியல் மதிப்பெண் அடிப்படையில் இளங்கலை மற்றும் முதுகலையில் 10 புள்ளிக்கு 8.5 புள்ளியும் பெற்று இருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் ஆசிரியர் பணி, ஆராய்ச்சி, தொழில்சாலை அனுபவம் ஆகியவற்றினை பெற்றிருக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக அளிக்கப்படும்.
அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் அவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதில் மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்படும் அல்லது தேர்வர்களுக்கு நேர்காணல் நடத்தியும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தப் பணியிடத்திற்கு 18 ந் தேதி மாலை 5 மணிக்குள் கூடுதல் பதிவாளர் மற்றும் இயக்குனர், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, அண்ணாப் பல்கலைக் கழகம், சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Conclusion:
Last Updated : Jun 17, 2019, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.