ETV Bharat / state

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஆறுமுகம் நியமனம்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் கலா நியமிக்கப்பட்டுள்ளார்.

Professor
Professor
author img

By

Published : Jan 6, 2023, 9:56 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக துணை வேந்தராக பேராசிரியர் ஆறுமுகத்தை, தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என்.ரவி நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 3 ஆண்டுகள் பணிபுரிவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஆறுமுகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் உயர் அழுத்த ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். இவர், 25 ஆண்டுகளுக்கும் மேல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தைக் கொண்டுள்ளார். 14 ஆண்டுகளுக்கும் மேல் பேராசிரியராக பணியாற்றியதுடன், 15 வருட நிர்வாக அனுபவம் பெற்றிருக்கிறார்.

இவர் 3 புத்தகங்களை எழுதியுள்ளதோடு, 19 சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். தேசிய அளவில் 220 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மேலும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதேபோல், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் கலா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது கரூரில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை துணை வேந்தர் கலா
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை. துணை வேந்தர் கலா

இவர் 34 ஆண்டுகளுக்கும் மேல் கற்பித்தல் அனுபவமும், 8 வருடங்களுக்கும் மேலான நிர்வாக அனுபவமும் கொண்டவர். 2 புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் 4 சர்வதேச கல்வி நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அவர் கல்வி சார்ந்த 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உருவாக்கி உள்ளார். 20 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'திமுகவின் ஆட்சிக்காலம் எப்போதும் தமிழாட்சி காலம்' - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.