ETV Bharat / state

பள்ளிக்கல்வித்துறையில் சம்பளம் வழங்குவதில் இந்த மாதம் சிக்கல்! - பள்ளிக்கல்வித்துறை

ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறையிலிருந்து சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளிக்கல்வித்துறையில் சம்பளம் வழங்குவதில் இந்த மாதம் சிக்கல் ..!

author img

By

Published : Oct 26, 2022, 3:32 PM IST

Updated : Oct 26, 2022, 4:49 PM IST

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலக ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் எனவும், பள்ளிகளில் இருந்து இதுவரை சம்பளப் பட்டியல் பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட்ட நிர்வாக மாற்றம் காரணமாக சம்பளப்பட்டியல் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது எனவும், நிதித்துறையிலிருந்து அனுமதிபெற்று கருவூலங்களில் விரைவில் மாவட்ட கல்வி அலுவலர் பெயரில் கணக்குத்தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிர்வாக மாற்றத்தினால் இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலகப்பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கெனவே இருந்த நிர்வாக முறையை மாற்றி, புதிய அரசாணை 151 அடிப்படையில், நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அரசாணையின்படி தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் 55 மாவட்ட கல்வி அலுவலகங்கள், தொடக்கக் கல்வித்துறையின்கீழ் 58 மாவட்ட கல்வி அலுவலகங்கள், தனியார் பள்ளிகளுக்கு என்று 39 மாவட்ட கல்வி அலுவலகங்கள் என, 152 மாவட்ட கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முந்தைய எண்ணிக்கையை விட 32 மாவட்ட கல்வி அலுவலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் பல மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்னும் முழுமையாகப் பொறுப்புகளை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக அரசு நிதி உதவி பெறக்கூடிய பள்ளிகளில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு நிதி உதவி பெறும் பள்ளிஆசிரியர்களுக்கான சம்பளப்பட்டியல் மாதம்தோறும் 20ஆம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பெறப்படும். இப்படி பெறப்படும் சம்பளப் பட்டியலில் மாவட்ட கல்வி அலுவலர் கையெழுத்திட்டு, கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு ஆசிரியர்களின் வங்கிக்கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படுகிறது.

அதேபோன்று அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் இல்லாத ஊழியர்களுக்கும் இதே முறையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து இதுவரை சம்பளப்பட்டியல் பெறப்படவில்லை. இனிமேல் சம்பளப்பட்டியல் பெற்று, அதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்டு சம்பளம் பெறுவதற்கு மிகவும் காலதாமதம் ஆகும் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் மூன்று ஆண்டுகளாகப்பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது புதிய ஊழியர்கள் அனைத்து இடங்களிலும் பணியில் சேர்ந்து இருக்கின்றனர். அலுவலகங்கள் மாற்றி அமைக்கப்பட்டதால், நிதிப்பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நடைபெறாததால் இந்த மாதம் மட்டும் காலதாமதம் ஏற்படும் என பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: சென்னைக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம் : தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Last Updated : Oct 26, 2022, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.