ETV Bharat / state

ஆருத்ரா மோசடியில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு!

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரம் தொடர்பாக பிரபல நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பது அம்பலம்!!

author img

By

Published : Apr 1, 2023, 11:26 AM IST

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட முதலீடுகளுக்கு மாத வட்டியாக 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 2438 கோடி முதலீடு பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு முக்கிய முகவர்கள் என மொத்தம் 21 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு இதில் இயக்குநர்கள் பாஸ்கர் ,மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ், மற்றும் பேச்சிமுத்து ராஜா, அய்யப்பன், உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் .

இவ்வழக்கில் இதுவரை ரொக்கமாக 5.69 கோடியும், தங்கம் வெள்ளி பொருட்கள் 1.13 கோடி மதிப்பு கைப்பற்றி உள்ளனர். மேலும் வங்கி கணக்கிலிருந்த பணம் 96 கோடி முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய அசையா சொத்துகள் 97 கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்னாள் பாஜக நிர்வாகி ஹரிஷை 4 நாள் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரூசோ என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் முன்னாள் பாஜக நிர்வாகி ஹரிஷிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் பிரபல நடிகரும் தயாரிப்பாளரும் வினியோகஸ்தருமான ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

குறிப்பாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைதான ரூசோ ஆகியோரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஆர் கே சுரேஷுடன் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பாஜகவில் ஓ.பி.சி பிரிவின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஆர்கே சுரேஷ் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவன வழக்குகளில் இருந்து, தனது நண்பர்களை தப்ப வைக்க உதவி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஆர்கே சுரேஷ் விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ய திட்டமிட்டனர். பலமுறை சம்மன் அனுப்பியும் கடந்த 3 மாதங்களாக உரிய விசாரணைக்கு ஆஜராகாததால் போலீசார் தேடிச் சென்ற நிலையில் ஆர்கே சுரேஷ் வெளிநாடு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக வெளிநாடு தப்பிச் சென்ற ஆர் கே சுரேஷை சென்னை அழைத்து வந்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்ட பணத்தின் மூலம் பட தயாரிப்பு விநியோகம் போன்ற விவகாரங்களை மேற்கொண்டாரா, இதில் தொடர்புடைய சினிமா பிரபலங்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள் யார் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாஜக பிரமுகர் ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு பாஜக பிரமுகர் இவ்வழக்கில் தொடர்பிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பட்டையை கிளப்பும் 'மைனரு வேட்டி கட்டி' பாட்டு.. எழுதியவர் யார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.