ETV Bharat / state

மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசுத்தொகை: அமைச்சர்

நியாயவிலைக் கடை ஊழியர்களில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்க ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் அளித்து அங்கீகரிப்பதன் மூலம் அவர்களின் செயல் திறனையும் ஈடுபாட்டையும் மேம்படுத்தலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை ஊழியர்களுக்கு  பரிசு தொகை: அமைச்சர்
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை ஊழியர்களுக்கு பரிசு தொகை: அமைச்சர்மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை ஊழியர்களுக்கு பரிசு தொகை: அமைச்சர்
author img

By

Published : Apr 9, 2022, 4:03 PM IST

சென்னை: மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலைக்கடை ஊழியர்களுக்கும் எடையாளர்களுக்கும்; பரிசுத்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.

இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானியக்கோரிக்கை விவாதத்திற்குப் பதிலுரை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி, பொது விநியோகத் திட்டம் சீராக செயல்படுவதில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர்.

விற்பனையாளர்களின் சிறந்த பணியினைத்தொடர ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் அளித்து அங்கீகரிப்பதன் மூலம் அவர்களின் செயல் திறனையும் ஈடுபாட்டையும் மேம்படுத்தலாம்.

இதன்பொருட்டு சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 நிலைகளிலும் மாவட்ட அளவில் 2 நிலைகளிலும் பரிசுகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதில், 'மாநில அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

அதோடு எடையாளர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 6,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மாவட்ட அளவைப் பொறுத்தவரை விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

இதுபோல எடையாளர்களுக்கு முதல் பரிசாக 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மாநில அளவில் சான்றிதழ் மற்றும் இதர செலவிற்கு 15 ஆயிரம் ரூபாயும், ஒரு மாவட்டத்திற்கு ரூபாய் 3 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இதன் மொத்த செலவினம் ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் அரசுக்கு ஏற்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தரமில்லாத பொங்கல் பொருட்கள் என்ற செல்லூர் ராஜூவின் கருத்தும்... சட்டப்பேரவையில் நடந்த காரசார விவாதமும்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.