சென்னை: சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது “ சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் மே மாதத்திற்குப் பிறகு பணிக்கு வர வேண்டாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக் கழகமாக இருந்தபோது அதிகமாக ஆட்களை நியமனம் செய்து விட்டார்கள். அரசு பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்ட பிறகு இதுபோன்ற பணியமர்வு குறித்த பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது. மே மாதத்திற்குப் பிறகு பணிக்கு வர வேண்டாம் என்று தொகுப்பூதிய ஊழியர்களுக்கு எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. மற்ற பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள் வரும்போது சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல்