ETV Bharat / state

பொது சொத்தை காக்க வஉசி பிறந்தநாளில் சபதம் ஏற்போம்! - prince kajendrababu

ஆசிரியர் தினம், வஉசி 150ஆவது பிறந்த நாளில் தேசத்தின் பொது சொத்தைக் காக்க சபதம் ஏற்போம் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தி உள்ளது.

prince-kajendrababu-says-lets-take-a-vow-on-voc-birthday-to-protect-public-property
பொதுச் சொத்தைக் காக்க வஉசி பிறந்தநாளில் சபதம் ஏற்போம்!
author img

By

Published : Sep 5, 2021, 4:45 PM IST

சென்னை: பொது பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவை அந்நிய ஏகாதிபத்தியம் கொள்ளையடிப்பதை அனுமதியோம் என்ற முழக்கத்துடன் தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டி ஆட்சியாளர்களை ஆட்டம் காணவைத்தவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்.‌

கிழக்கிந்திய கம்பெனி தொடங்கி வணிகம் என்ற பெயரில் நாட்டிற்குள் நுழைந்த அன்னிய ஏகாதிபத்தியம், இந்தியர்களை அடிமைப்படுத்தி நாட்டைச் சூறையாடிக் கொண்டிருந்த சூழலில், இயற்கை வளமும், மனித ஆற்றலும் கொள்ளை போவதைத் தடுக்க, தன் உடைமைகளையும், உயிரையும் தந்தவர் விடுதலைப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனார்.

இங்கிலாந்து அரசு, நம் நிலத்தைக் கூறுபோட்டு, சூறையாடுவதைத் தடுப்பதற்காக, போராடியவர்களைச் சிறையில் அடைத்திட, அந்த அரசால் நிறைவேற்றப்பட்டு இந்தியர்கள் மீது பாய்ந்ததுதான் தேச துரோகச் சட்டம். நாட்டின் சொத்தையும், நாட்டு மக்களின் உரிமையையும் காத்திட, போராடினால், அதற்குப் பெயர் தேசத் துரோகமா? என்று சீறி எழுந்த விடுதலைப் போராட்ட தியாகிகளில் முதன்மையானவர்தான் வஉசி

தியாகிகளின் பெருங்கனவு

பலரின் தியாகத்தால் உருவான விடுதலை இந்தியா, சமதத்துவ‌ச் சமூகமாக மலரும் என்பதே விடுதலைப் போராட்ட தியாகிகளின் பெருங்கனவு.

இந்தியா விடுதலை அடைந்தவுடன் நவீன கட்டமைப்பை, தொழிற்சாலைகளை, காப்பீடு உள்ளிட்ட சேவைத் துறைகளை உருவாக்க பெரும் முதலாளிகள் முன்வரவில்லை. உழைக்கின்ற மக்கள் செலுத்திய வரிப்பணத்தில், தொழிலாளர்களின் உழைப்பில் உருவானதே இன்றைய பொதுத் துறை.

விடுதலைப் போராட்டத் தியாகிகளின் உணர்வுகளில் வெளிப்பட்ட சமத்துவ இந்தியக் கனவு துளிகூட இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பொதுச் சொத்தை விற்பதையே குறியாக வைத்திருந்தார்கள். அன்று வாஜ்பாயி தலைமையில் இருந்த இந்திய அரசு பொதுத் துறைப் பங்குகளை விற்பதற்கென்றே தனித் துறையை உருவாக்கியது.

பொதுச்சொத்தை விற்கத் திட்டம்

அதன் நீட்சியாக, மிச்சம் மீதி இருக்கும் பொதுத் துறை மொத்தத்தையும் விற்று ஒழித்திட வழி செய்யும் பணமாக்கல் திட்டத்தைத் மோடி தலைமையிலான இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. காப்பீடு, அரசின் ஏகபோக உரிமையாக இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்தி கூறினார்.

அத்தகையக் காப்பீட்டுத் துறை, துறைமுகங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானங்கள், நம் குழந்தைகளுக்குச் சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டுடன், வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய கனரக தொழிற்சாலைகள் என, அனைத்துப் பொதுத் துறைகளையும் பணம் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் ஈட்ட தனியார்ப் பயன்பாட்டிற்கு இந்திய அரசு தந்து விட, திட்டம் தீட்டிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

யார் தேச பக்தர்?

நம் மூதாதையர்கள் ரத்தத்தாலும், வியர்வையினாலும் உருவாக்கப்பட்டப் பொதுச் சொத்துக்களை, இந்திய மக்களின் ஒப்புதல் இல்லாமல், தனியாரிடம் ஒப்படைப்பது, மக்களுக்குச் செய்யும் நன்மையா தீமையா? என்று ஒவ்வோர் இந்தியரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. பொதுச் சொத்தை தனியாரிடம் ஒப்படைக்காதே என்று சொல்பவர் தேச பக்தரா அல்லது பொதுச் சொத்தை தனியாருக்கு ஒப்படைத்து பணமாக்குகிறேன் என்று சொல்பவர் தேச பக்தரா? பொதுத் துறையில் ஆலைகளையும், சாலைகளையும் உருவாக்கி நிர்வகிப்பது நிர்வாக திறமை.

அரசிடம் நிர்வகிக்கப் பணம் இல்லை, ஆகையால், பொதுத் துறையைத் தனியாரிடம் தந்து பணமாக்குகிறேன் என்பது நிர்வாகத் திறமையின்மை. திறமைக்கும் திறமையின்மைக்கும் உள்ள வேறுபாட்டை, தகுதி, திறமை குறித்து பேசுபவர்கள் விவாதிக்க வேண்டும்.

நிர்வாகத் திறமை இல்லாதவர்கள் நிர்வாகத்தில் இருந்து விலகுவது நல்லது; விவரம் அறிந்தவர்கள் செயலாற்றக் கடமைப் பட்டவர்கள்; நல்லவர்களின் மௌனம் தீயவர்களின் கொடுஞ்செயலைவிடக் கொடுமையானது. முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், இன்று ஆசிரியர் தினமாக் கொண்டாடப்படுகிறது.

வஉசி பிறந்தநாளில் சபதம்

ஆசிரியர் தினத்தில், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்குரிய சாவித்திரிபா பூலே தங்கள் உரிமைக்காக மக்கள் எவ்வாறு போராடி வெல்ல வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன் உதாரணமாகத் திகழ்ந்தார். அவர் சந்தித்த அவமானங்கள், கொடுமைகளை விட அதிகமாக இன்றைய ஆசிரியர்கள் சந்தித்து விடப் போவதில்லை.

ஆசிரியரும் தொழிலாளர் வர்க்கம்தான் என்பதை உணர்ந்து, போராடுகின்ற உழைக்கின்ற வர்க்கத்துடன் துணிந்து நின்று இந்தியாவின் சொத்தைக் காக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. கௌதம புத்தர் தொடங்கி, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் எனப் பலரும் கூறிச் சென்றப்படி மக்களோடு உரையாடுவோம்.

நம் தேசம் காக்க, தேசத்தின் சொத்தைக் காக்க, வஉசியின் இரத்தத்தால், வியர்வையால் கிடைத்த விடுதலை நிலைக்க, ஆசிரியர் தினத்தில், வஉசி பிறந்த நாளில் சபதம் ஏற்போம். அதுவே, வஉசி அவர்களின் 150ஆவது பிறந்த நாளில் அவருக்குச் செலுத்தும் மெய்யான புகழஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேசிய பணமாக்கல் திட்டத்தில் மோசடி - காங். முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.