இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அதற்கடுத்த நிலையில் அருகிலுள்ள நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்ற வரிசையில் கல்வியை தொடரும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மூலம் பாடம் நடத்தபடுகிறது. ஆனால் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கண்காணிப்பு, வழிகாட்டுதல் இருந்தால் தொடக்கப் பள்ளியில் இருந்து நல்ல தரமான கல்வியை வழங்க முடியும். மேலும் மாணவர்களின் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த வழி ஏற்படும் . உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் மாநில அளவில் நடைபெறுகின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சிறப்பாக அமையும். எனவே ஒன்றியங்களில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி குறுவள மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளை கண்காணிக்கும் தலைமையாசிரியர்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்த வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
- அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை, கற்பிக்கும் திறன் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.
- பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் யாராயினும் விடுப்பு எடுத்தாலோ, அவசரப் பணியால் வட்டார கல்வி அலுவலகம், வட்டார வள மையம், பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள சென்றாலோ ஆசிரியர்களை மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும்.
- ஆசிரியர்களின் தற்செயல் விடுப்பு , வரையறுக்கப்பட்ட விடுப்பு குறித்த தகவலை குறுவள மையமாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும். இதர விடுப்பு குறித்த விண்ணப்பம் தலைமை ஆசிரியர் வழியாக உரிய அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
- பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உரிய வகையில் மாணவர்களுக்கு சென்று அடைகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
- பள்ளிகளில் காணப்படும் குறைகள் குறித்து உரிய கல்வி அலுவலருக்கு புகாராக தெரியப்படுத்த வேண்டும். மேலும், அந்தப் புகார் மீதான இறுதி நடவடிக்கை அல்லது தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
- பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டியிருந்தால் ஒரு அலுவலகம் பரிந்துரை செய்து அந்தப்பணி முடியும் வரை தொடர்ந்து நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
- பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்த, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வக உபகரணங்களை பயன்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகளை பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாணவர்களின் ஆர்வத்தையும் உடல்நலத்தினையும் மேம்படுத்திட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் விளையாட்டு வகுப்புகள் எடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்தி கல்வித் தரத்தினை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
- உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் அனைத்து வகையான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தி கம்ப்யூட்டர் சார்ந்த திறன்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
நீட் ஆள்மாறாட்ட வழக்கு: தந்தை, மகன் ஜாமின் மனு ஒத்திவைப்பு!