ETV Bharat / state

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பூசாரிக்கு தர்ம அடி - சென்னை

சென்னை அருகே 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பூசாரிக்கு சிறுமியின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பூசாரிக்கு தர்மஅடி

author img

By

Published : Aug 5, 2022, 12:36 PM IST

சென்னை: மதுரவாயல் அடுத்த கந்தசாமி நகர், 5வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(55), இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். அந்த கோவிலுக்கு தனது மகளுடன் சென்ற பெண்ணிடம் அவரது 14 வயது மகளுக்கு சுற்றி போட வேண்டும் என பூசாரி சந்திரசேகர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பூசாரி வீட்டிற்கு தனது மகளை அழைத்து சென்ற பெற்றோர் சிறுமிக்கு சுற்றி போட்டு விட்டு அவரது வீட்டிலேயே தங்கவைத்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியிடம் பூசாரி தவறாக நடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற சிறுமியின் பெற்றோர் பூசாரி சந்திரசேகரை சரமாரியாக தாக்கினார்.

இதில் காயம் அடைந்த சந்திரசேகர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி சந்திரசேகர் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவியிடம் முதியவர் சில்மிஷம்;உறவினர்கள் தட்டிக்கேட்டதில் உயிரிழப்பு - 3 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.